ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார் அம்பானி

by Staff / 05-04-2023 11:34:24am
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார் அம்பானி

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 83.4 பில்லியன் டாலர்களுடன் ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதே வரிசையில், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்தையும் பிடித்தார். இதற்கிடையில், ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 24வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஹின்டர் பர்க் அறிக்கையின் படி, தொடர்ந்து அந்நிறுவனம் சரிவை சந்தித்துள்ளது. நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் 3வது இடத்திலும், சைரஸ் பூனவல்லா 4வது இடத்திலும், லட்சுமி மிட்டல் 5வது இடத்திலும் உள்ளனர்.
 

 

Tags :

Share via