கர்நாடகாவில் 3 தொகுதிகளில் ஓபிஎஸ் அணி போட்டி

by Staff / 20-04-2023 03:57:21pm
கர்நாடகாவில் 3 தொகுதிகளில் ஓபிஎஸ் அணி போட்டி

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கோலார் தங்கவயல், காந்தி நகர் தொகுதிகளிலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காந்திநகரில் கர்நாடக மாநில செயலாளர் குமார், கோலார் தங்கவயலில் கர்நாடக மாநில தலைவர் ஆனந்தராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். முன்னதாக புலிகேசி நகர் தொகுதியில், மாணவர் அணி செயலாளரான நெடுஞ்செழியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். அம்மாநிலத்தில் அதிமுக சார்பில், அவைத்தலைவர் அன்பரசன் போட்டியிடுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. வரும் மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

 

Tags :

Share via