மேல்மருவத்தூர் ஊராட்சி தலைவராக பங்காரு அடிகளார் மனைவி, துணைத்தலைவராக பேரன் தேர்வு

by Editor / 23-10-2021 04:29:09pm
மேல்மருவத்தூர் ஊராட்சி தலைவராக பங்காரு அடிகளார் மனைவி, துணைத்தலைவராக பேரன் தேர்வு


மேல்மருவத்தூர் ஊராட்சியில் அடிகளாரின் மனைவி லட்சுமி ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அதேபோல் வார்டு எண் 2 இல் போட்டி இல்லாமல் வெற்றி பெற்ற ஸ்ரீ தேவி அடிகளாரின் மகள் ஆவார். அதேபோல், வார்டு எண் 6 இல் போட்டியிட்டு வெற்றிபெற்ற அகத்தியன், அடிகளாரின் மகன் வழி பேரன் ஆவர். ( அடிகளாரின் மூத்த மகன் கே.ப. அன்பழகனின் மகன் ).


இதனையேடுத்து  நடைபெற்ற மறைமுக தேர்தலில் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலுக்கு அகத்தியன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடுவதால் ஒருமனதாக அகத்தியன் ஊராட்சிமன்றத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை மேல்மருவத்தூர் அடிகளார் குடும்பத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

 

Tags :

Share via
Logo