கனமழை பெய்வதால் கவனமாக இருங்கள்- கேரள மக்களுக்கு ராகுல் வேண்டுகோள்

by Editor / 15-11-2021 03:37:44pm
கனமழை பெய்வதால் கவனமாக இருங்கள்- கேரள மக்களுக்கு ராகுல் வேண்டுகோள்

காங்கிரஸ் தொண்டர்கள் மக்களுக்கு எல்லா வகையிலும் உதவ வேண்டும் என்றும் ராகுல் காந்தி அறிவுறுத்தி உள்ளார்.

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.

பல்வேறு சாலைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டிருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இந்நிலையில், கேரள மக்களை கவனமுடன் இருக்கும்படி காங்கிரஸ் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
 
‘கனமழை பெய்து வரும் கேரளாவில் நமது சகோதர, சகோதரிகள் தைரியமாக இருக்கிறார்கள். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கவனமாக இருங்கள்,

அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றுங்கள்’ என ராகுல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தொண்டர்கள் மக்களுக்கு எல்லா வகையிலும் உதவ வேண்டும் என்றும் ராகுல் காந்தி அறிவுறுத்தி உள்ளார்.

இதையும் படியுங்கள்... உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: பிரியங்கா

 

Tags :

Share via

More stories