அருந்ததி ராய் மீது பாயும் உபா சட்டம் - சு. வெங்கடேசன் கருத்து

by Staff / 15-06-2024 05:28:37pm
அருந்ததி ராய் மீது பாயும் உபா சட்டம் - சு. வெங்கடேசன் கருத்து

அருந்ததி ராய் மீது பாயும் உபா சட்டம் குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், தேர்தலில் பாடம் கற்றுக் கொள்ளாத பாஜக. கருத்தைக் கண்டு அஞ்சும் கோழைகளுக்கு அடக்கு முறையே ஆயுதம். அடக்குமுறையை எதிர் கொள்ளும் கூர்மையான ஆயுதமே கருத்துரிமை. தேசம் அருந்ததிராயின் பக்கம் நின்று ஜனநாயக விரோதிகளை எதிர்கொள்ளும் என பதிவிட்டுள்ளார். அருந்ததி ராய் மீது அமைதிக்கு ஊறு விளைவித்ததாக உபா சட்டம் பதியப்பட்டுள்ளது.

 

Tags :

Share via