ஆளுநர் இல.கணேசன் கான்வாய் செல்லும் வழியில் 50 வயது மதிக்கத்தக்க நபர் உடலில் தின்னர் ஊற்றி தீக்குளிப்பு - பரபரப்பு
மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மணிப்பூர் ஆளுநர் இல கணேசன் இன்று மதுரைக்கு வருகை தருகிறார்.இந்நிலையில் மதுரை விமான நிலையத்திலிருந்து அழகர்கோவில் சாலையில் உள்ள அரசினர் தங்கு விடுதிக்கு செல்லும் வழியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இந்நிலையில் ஆளுநர் இல.கணேசனின் கான்வாய் செல்லும் பகுதியான கே கே நகர் வக்பு வாரிய கல்லூரி எதிரில் 50 வயது மதிக்கத்தக்க நபர் உடலில் தின்னரை ஊற்றி தீக்குளித்தார்.இதில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி.தீக்குளித்த நபர் குறித்து அண்ணா நகர் காவல் துறையினர் நேரில் விசாரணை
Tags :