நீட் தேர்வுக்கு தடை வாங்க முடியவில்லை -மு.க.ஸ்டாலின்,.

by Staff / 14-09-2025 02:26:06pm
நீட் தேர்வுக்கு தடை வாங்க முடியவில்லை -மு.க.ஸ்டாலின்,.

நீட் தேர்வுக்கு தடை வாங்க முடியவில்லை என்பதை மறுக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஓசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மு.க.ஸ்டாலின், "ஆட்சிக்கு வந்ததும் நீட் விலக்கு சட்டம் இயற்றி அனுப்பினோம். அதை ஆளுநர் மூலம் என்னென்ன சூழ்ச்சிகள் செய்து ஒன்றிய அரசு தடுத்தது என மக்களுக்குத் நன்றாகத் தெரியும். அப்போதும் கடுமையான சட்டப் போராட்டம் நடத்தினோம். அதிமுகவைப் போல மறைத்து வைத்து நாடகம் ஆடவில்லை" என்று கூறியுள்ளார்

 

Tags : நீட் தேர்வுக்கு தடை வாங்க முடியவில்லை -மு.க.ஸ்டாலின்,.

Share via