கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணியில் காவல் துறையினர் தீவீரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் +2 மாணவி தற்கொலை செய்த வழக்கு தொடர்பாக மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த போராட்டத்தின் போது, காவல்துறையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், பலர் காயமடைந்தனர். இந்நிலையில் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்து வருகின்றனர். இந்த கலவரம் தொடர்பாக இன்று காலை வரை 192 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறைனர் தெரிவித்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்படாவண்ணம் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் அந்தபகுதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.மேலும் கலவரத்தை பயன்படுத்தி கனியாமூர் தனியார் பள்ளியில் புகுந்து மடிக்கணினி, நாற்காலி, மேஜை திருடிய 15 பேர் காவல்துறையினரின் வாகன சோதனையில் சிக்கினார் அவர்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது

Tags : The police are active in arresting those involved in the riots