இல.கணேசனுக்கு மேற்கு வங்க மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு

குடியரசு துணை தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தன்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் மேற்கு வங்க மாநில ஆளுநர் பொறுப்பை, மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் கூடுதலாக கவனிப்பார் என குடியரசுத்தலைவர் அறிவித்துள்ளார்.
Tags : L. Ganesan has additional responsibility as the Governor of West Bengal