வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தியவர் மீது பாய்ந்த குண்டாஸ். காவல் துறை அதிரடி நடவடிக்கை.

by Editor / 18-02-2025 10:38:42am
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தியவர் மீது பாய்ந்த குண்டாஸ். காவல் துறை அதிரடி நடவடிக்கை.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பேரளம் காவல்துறையினர் கடகம்பாடி பகுதியில் கடந்த 24.1.2025 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த காரை மறைத்து சோதனை செய்த பொழுது அதில் வெளி மாநில பாண்டிச்சேரி மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது இந்த நிலையில் மது பாட்டில்களை கடத்திய ஆதலையூர் பகுதியைச் சேர்ந்த செல்வபிரகாஷ் வயது 27 என்பவரை போலீசார் கைது செய்து மது பாட்டில்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செல்வ பிரகாஷ் என்பவர் மீது திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் போக்கிரித்தாள் பராமரிக்கப்பட்டு வருகிறது மேலும் இவர் மீது கொலை ஆயுதச் சட்டம் என மூன்று வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது என்பது தெரிய வந்ததை அடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்ததின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி இன்று செல்வ பிரகாஷை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் கள்ள மது விற்பனை வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல் பதுக்கி வைத்தல் கஞ்சா மற்றும் குட்கா பான் மசாலா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருன் கரட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags : வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தியவர் மீது பாய்ந்த குண்டாஸ். காவல் துறை அதிரடி நடவடிக்கை

Share via