போரை முடிவுக்கு கொண்டு வருவோம்: நெதன்யாகு

by Staff / 10-10-2023 01:34:32pm
போரை முடிவுக்கு கொண்டு வருவோம்: நெதன்யாகு

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், ''நாங்கள் போரை துவங்கவில்லை. ஆனால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் இதை முடிப்போம்'' என்று தெரிவித்தார். இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை முதல் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஒரே நேரத்தில் இஸ்ரேல் மீது வீசி தாக்கினர். இதில் நிலைகுலைந்த இஸ்ரேல் உடனடியாக பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo