நாடு முழுவதும் 200 ரயில் சேவை பாதிப்பு பற்றி எரியும் ரெயில்

by Editor / 17-06-2022 02:26:35pm
நாடு முழுவதும் 200 ரயில் சேவை பாதிப்பு பற்றி எரியும் ரெயில்

ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி வழங்கும் அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பல இடங்களில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பொது சொத்துக்களையும் சேதப்படுத்தியதால் பதற்றம் நிலவுகிறது. நேற்று பீகார் மாநிலம் சாப்ராவில் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மற்றும் தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத் ஆகிய இடங்களிலும் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதேபோல பிறமாநிலங்களுக்கு இந்த போராட்டம் பரவி வருகிறது. இந்த போராட்டத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் சுமார் 200 ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் 200 ரயில் சேவை பாதிப்பு பற்றி எரியும் ரெயில்
 

Tags :

Share via

More stories

Logo