இன்று முதல் டிச., 1 வரை மழை

by Editor / 26-11-2023 10:55:21am
இன்று முதல் டிச., 1 வரை மழை

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் டிச., 1 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

 

Tags : இன்று முதல் டிச., 1 வரை மழை

Share via

More stories

Logo