பாமக கொறடா அருளை நீக்கக்கோரி 3 எம்எல்ஏக்கள் மனு

பாமக கொறடாவாக உள்ள எம்எல்ஏ அருளை நீக்கக்கோரி 3 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை செயலாளரை சந்தித்து மனு அளித்துள்ளதால் பாமகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமதாஸ் ஆதரவு நிலைபாட்டில் உள்ள அருளை அன்புமணி சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கினார். அன்புமணிக்கு அந்த அதிகாரம் இல்லை என கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று கூறியிருந்தார். இதனிடையே சட்டப்பேரவையில் பாமக கொறடாவாக உள்ள எம்எல்ஏ அருளை நீக்கக்கோரி பாமக எம்எல்ஏக்கள் சதாசிவம், மயிலம் சிவக்குமார், வெங்கடேஷ்வரன் ஆகியோர் மனு அளித்துள்ளனர்.
Tags :