தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலுள்ள ஆடு சந்தைகளில் ஆடுகளின் விற்பனை களைகட்டிவருகிறது.

by Editor / 04-11-2023 10:20:48pm
 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலுள்ள ஆடு சந்தைகளில் ஆடுகளின் விற்பனை களைகட்டிவருகிறது.

 தீபாவளி பண்டிகை வரும் 12-ந் தேதி கொண்டாடப்படுவதால் சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சின்னதிருப்பதியில் ஆட்டு சந்தை இன்று நடைபெற்றது. இந்த சந்தைகளுக்கு விவசாயிகள் வளர்க்கும் செம்மறி,  வெள்ளாடு மற்றும் குரும்பாடுகள் ஆகியவை விற்பனைக்கு வந்திருந்தன.ஆட்டு சந்தையில் ஆடுகளின் விற்பனையும்,  விலையும் அதிகரித்து காணப்பட்டது. ஓமலூர் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பலரும் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி சென்றனர்.
ஓமலூர் வட்டாரத்தில் தீபாவளி பண்டிகையில் அம்மன் கோவிலில் ஆடுகள் பலியிட்டு வழிபடவும்,  பண்டிகைக்கு  இறைச்சி  சீட்டு நடத்தி வருபவர்களும் சந்தைக்கு ஆடுகள் வாங்க வந்திருந்தனர்.  அதனால், ஓமலூர் மற்றும் சின்னதிருப்பதி ஆட்டு சந்தைகளில் 10 கிலோ எடையிலிருந்து 35 கிலோ எடை வரை ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. ஒரு ஆடு ரூ.7500 ரூபாயில் துவங்கி ரூ.35 ஆயிரம் ரூபாய் வரை எடையைப்பொறுத்து  விற்பனையானது.

 

Tags : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு

Share via