ஒன்றிய அரசின் நிதித்துறை அதிகாரி என கூறி நாடகமாடிய நாகசுப்பிரமணியன் கைது.
ஒன்றிய அரசின் நிதித்துறை அதிகாரி என கூறி மோசடி செய்ய முயன்ற மாங்காடு பகுதியை சேர்ந்த நாகசுப்பிரமணியம் என்பவர் கைது.சென்னை காவல் ஆணையரை போனில் தொடர்பு கொண்டு ஒன்றிய அரசின் நிதித்துறை இணை செயலர் பேசுவதாக பேசியுள்ளார்.மத்திய குற்றவியல் ஆவணங்கள் மோசடி தொடர்பான புகாரின் வழக்கு விசாரணையை விரைவுபடுத்துங்கள் எனவும், நாகசுப்பிரமணியம் என்பவரை அனுப்பி வைக்கிறேன், அவரிடம் வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் சொல்லி அனுப்புங்கள் எனவும் ஆணையரிடம் கூறியுள்ளார்.செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அது தமிழ்நாட்டு எண் என்பது தெரிய வந்தது. போலீஸ் விசாரணையின்போது, நாடகமாடியதை நாகசுப்பிரமணியன் ஒப்புக் கொண்டதையடுத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags : ஒன்றிய அரசின் நிதித்துறை அதிகாரி என கூறி