கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் அமைப்பின் நிர்வாகி கைது.
ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் மாவோயிஸ்ட் அமைப்பு பல்வேறுகட்ட போராட்டங்களை அரசுக்கு எதிராக நடத்திவருகிறது.இந்தநிலையில் இந்த அமைப்பினர் ராணுவம்,காவல்துறையினரோடு சண்டையிடுவது அவ்வப்போது நடந்துவருகிறது.அரசு இவர்களை கைதுசெய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.இதில் இந்திய மக்கள் விடுதலை முன்னணியில் முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான அஜய் ஓரோனை என்பவர் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகேபத்திரங்காவு பகுதியில் தலைமறைவாக இருந்து கூலி தொழிலாளி போல செயல்பட்டு பணியாற்றி வருவதாக ஜார்க்கண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதை ஒட்டி பத்திரங்காவுவிற்கு விரைந்து சென்ற ஜார்க்கண்ட் போலீசார் கேரள போலீசாரின் உதவியுடன் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். கோழிக்கோடு நீதிமன்றத்தில் இவர் ஆஜர்படுத்திய பின்பு ஜார்கண்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். இவர் கடந்த ஒன்றரை மாதங்களாக அப்பகுதியில் தங்கியிருப்பதாகவும் 2019ம் ஆண்டிலிருந்து கேரளாவுக்கு அவ்வப்போது வந்த செல்வதும் விசாரணையில் தெரிய வந்தது. இவரது செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தபோது, இவர் கேரளாவில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
Tags :