குழந்தைகள் மீதான கோவாக்சின் சோதனை எப்போது?
குழந்தைகள் மீதான கோவாக்சின் தடுப்பூசியின் 2 ஆம் டோஸ் பரிசோதனை அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசியை 2 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான பரிசோதனையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மேற்கொண்டு வருகிறது.அதன்படி 2 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 2 ஆம் டோஸ் தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சோதனை அடுத்த வாரம் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. குழந்தைகளை 3 பிரிவுகளாக பிரித்து நடத்தப்படும் இச்சோதனையின் முடிவுகள் இன்னும் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
Tags :