வடமாநிலத்தொழிலாளர்கள் இடையே மோதல் ஒருவர் கொலை.

தென்காசி மாவட்ட கடையநல்லூர் அருகிலுள்ள சொக்கம்பட்டி காவல்நிலைய எல்லகைக்குட்பட்ட புன்னையாபுரம் முந்தல் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ரைஸ் மில் உள்ளது.இந்த ரைஸ் மில்லில் டெல்லியைச் சேர்ந்த சங்கர்சரோஜ் மகன் அணிகேட் வயது 25 என்பவரும், டெல்லி சாலிமார் பேக், லோகியா கேம் பகுதியை சேர்ந்த நல்லா சரோஜ் மகன் உபேந்தர் வயது 24 ஆகியோர் ரைஸ் மில்லின் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் மத்தியில் வேலை பார்ப்பதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவில் வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு ரைஸ் மில் அருகே தங்கும் விடுதியில் இரவு சமையல் செய்து கொண்டிருந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரைஸ் மில்லில் வேலை செய்கின்ற போதும், சரிவர வேலை செய்வதில்லை. வேலையை முடித்துவிட்டு தங்கும் விடுதிக்கு திரும்பியதும், சமையல் வேலையையும் செய்யாமல் தூங்குகிறாய் என இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது உபேந்தர் காய்கறிகளை சமையலுக்கு வெட்டிக் கொண்டிருந்த போது கையில் இருந்த கத்தியால் அணிகேட்டின் மாா்பில் குத்தியுள்ளார். இதில் அணில்கேட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த அணிகேட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிச் செல்ல முயன்ற கொலையாளி உபேந்தரை பாம்புகோயில் சந்தை ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
Tags : வடமாநிலத்தொழிலாளர்கள் இடையே மோதல் ஒருவர் கொலை.