ஊருக்குள் புகுந்த 70 காட்டு யானைகள்

by Staff / 11-12-2023 03:47:06pm
ஊருக்குள் புகுந்த 70 காட்டு யானைகள்

கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகியவற்றின் மூன்று எல்லைகள் ஒன்றாக சேரக்கூடிய பகுதியாக ஆந்திர மாநிலம் வி.கோட்டா மண்டலம் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இவ்வழியாக கர்நாடகாவில் இருந்து ஆந்திரா நோக்கி குப்பம் பகுதியில் சுமார் 70 யானைகள் கொண்ட கூட்டம் வந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம், தனியாக எங்கும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo