தமிழகத்தில் சமாஜ்வாதி கட்சி கலைக்கப்படுவதாக அறிவிப்பு
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவுறுத்தலின்படி, சமாஜ்வாடி கட்சியின் தமிழ்நாடு பிரிவு கலைக்கப்பட்டது என அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தளப்பக்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு மக்களிடையே கட்சிக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் கட்சி கலைக்கப்பட்டு இருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் அக்கட்சி பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags :