தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே 1.4% மக்களே உள்ளனர்

தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே 1.4% மக்களே உள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். "பல்வேறு துறைகளில் இறுதி இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது முதலிடத்தில் உள்ளது. அமைதியான மாநிலமான தமிழ்நாட்டில் தான் தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. கலவரங்களை தூண்டலாம் என சிலர் நினைத்தாலும் தமிழக மக்களே அதை முறியடிப்பார்கள். குற்ற சம்பவங்கள் நடந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
Tags :