தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

by Editor / 22-09-2022 11:03:34am
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 2022-23ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்.) படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கான இணையதள இணையதள விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் அக்டோபர் 3ம் தேதி ஆகும். மாணவர்கள் http://tnhealth.tn.gov.in மற்றும் http://tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.

 

Tags :

Share via