தனி விமானம் மூலம் பீகார் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் புறப்பட்டுள்ளார். வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நடத்தி வரும் பேரணியில் இன்று முதலமைச்சர் பங்கேற்று ஆதரவு தெரிவிக்கிறார். தொடர்ந்து தர்பங்காவில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ராகுலுடன் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். காலை 10.30 மணிக்கு பேரணி தொடங்கும்.
Tags : தனி விமானம் மூலம் பீகார் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.