வாக்காளர்களில் 78.09% பேருக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்  மூலம் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன

by Admin / 13-11-2025 12:01:42am
 வாக்காளர்களில் 78.09% பேருக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்  மூலம் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன

இந்திய தேர்தல் ஆணையம்தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கான  படிவங்கள் விநியோகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்கள் 6.41 கோடிக்கும் அதிகமானோர்.நவம்பர் 12, 2025 அன்று மாலை 3.30 நிலவரப்படி, இந்த வாக்காளர்களில் 78.09% பேருக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்  மூலம் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன..வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்கும் பணி நவம்பர் 4, 2025  அன்று தொடங்கியது, இது டிசம்பர் 4, 2025 வரை தொடரும்.வாக்காளர்கள் தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து, ஒரு நகலை தங்களிடம் வைத்துக்கொண்டு, கையொப்பமிடப்பட்ட மற்றொரு நகலைவாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். வாக்காளர்கள் தங்கள் விவரங்களைச் சரிபார்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும், பெயர் சேர்க்க/நீக்க விண்ணப்பிக்கவும் ஆன்லைன் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. 

 

Tags :

Share via