சிம்லா மற்றும் காஷ்மீர் பகுதிகளில் ஆப்பிள் சீசன் ஆப்பிள் விலை சரிவு!

சிம்லா மற்றும் காஷ்மீர் பகுதிகளில் ஆப்பிள் சீசன் துவங்கியுள்ளதை தொடர்ந்து சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டிற்கு ஆப்பிள் பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.
24 கிலோ எடை கொண்ட சிம்லா ஆப்பிள் பெட்டி ஒன்றின் விலை குறைந்த பட்சம் 1400 ரூபாயில் இருந்து 2500 ரூபாய் வரை விற்பனையாகிறது.
அதிக சுவை கொண்ட காஷ்மீர் ஆப்பிள் பெட்டி ரூபாய் 1000 முதல் 1400 வரை விற்பனையாகிறது.
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ஆப்பிள் பழங்கள் அதிக வரத்து காரணமாக விலை குறைந்த நிலையிலும் சில்லரை விற்பனை கடைகளில் கிலோ ரூபாய் 200 - 250 என அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது
Tags : சிம்லா மற்றும் காஷ்மீர் பகுதிகளில் ஆப்பிள் சீசன்