புயல் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு

by Staff / 30-10-2022 11:44:12am
புயல் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை 'நால்கே' என்கிற சக்தி வாய்ந்த புயல் நேற்று முன் தினம் தாக்கியது. குறிப்பாக இந்த புயல் அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடியது. புயல், மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பங்களில் 31 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo