தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்: சிக்கிய பல கோடி பொருட்கள்
தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அங்கு தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக வேலை பார்த்து வருகின்றனர். கடந்த அக்டோபர் 9 முதல் தற்போது வரை மாநிலம் முழுவதும் ரூ.669 கோடி மதிப்பிலான பணம், மது உள்ளிட்ட பொருட்கள் அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பணம், மதுபானங்கள், போதைப் பொருட்கள் என ரூ.87.23 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று காரில் உரிய ஆவணமின்றி பணம் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
Tags :