மனோபாலா மறைவிற்கு நடிகர் ரஜினி இரங்கல்

by Staff / 03-05-2023 02:57:45pm
மனோபாலா மறைவிற்கு நடிகர் ரஜினி இரங்கல்

பிரபல நடிகரும் திரைப்பட இயக்குனருமான மனோபாலா (௬௯) உடல்நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார். திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் மனோபாலாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். " பிரபல இயக்குனரும் நடிகருமான அருமை நண்பர் மனோபாலா இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்" என்று நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via