அமைச்சர் பொன்முடி ஆஜராக சம்மன் - அமலாக்கத்துறை
சட்டவிரோத பணப்பரிவத்தனை விவகாரத்தில் அமைச்சர் பொன்முடி நவம்பர் 30 நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. திமுக அமைச்சர்களை குறிவைத்து, வருமான வரித்துறை - அமலாக்கத்துறை தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகிறது. அதன்படி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் கடந்த மாதம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புள்ள இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில், சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் பொன்முடியை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டு அனுப்பினர். இந்தநிலையில், நவ.30-ல் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதேபோல், முன்னதாக திமுக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்-கும் அமலாக்கத்துறை ச்ம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
Tags :