அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுகைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குளிர் வசதி குளிர் இல்லாத பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுகைகள் ஒதுக்கி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அரசு விரைவு பேருந்து முன்பதிவு செய்யும் போதே இரண்டு படுக்கைகளை பெண்களுக்கான ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பெண் பயணிகள் யாரும் முன்பதிவு செய்யாத போது அவற்றைப்பொது படுக்கையாக கருதி மற்ற பயணிகளும் ஒதுக்களம் என குறிப்பிட்டுள்ளது.
Tags :