ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 18-01-2023 12:54:54pm
ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பப்பட்டி கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் செல்வநாதன் (40). இந்திய ராணுவத்தில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக செல்வநாதன் ஊர் திரும்பினார். இவருக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via

More stories