குண்டுவெடிப்பு - 11 பேர் பலி

பாகிஸ்தான்: பலுசிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஹர்னாய் பகுதியில் உள்ள சுரங்கத்துக்குத் தொழிலாளர்களை கொண்டு சென்ற லாரி ஒன்றின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Tags :