ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய புலனாய்வுக் குழு கடிதம்
பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பியுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவின் பாஸ்போட்டை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு சிறப்பு புலனாய்வு குழு கடிதம் எழுதியுள்ளது. பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாசப்படம் வெளியான விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ஏற்கனவே 5 முறை ரேவண்ணாவிற்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது. ஆனால் அதற்கு அவர் முறைப்படி எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே அவரது பாஸ்போட்டை முடக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழு கடிதம் எழுதியுள்ளது.
Tags :