லாரி மோதி விபத்து.. உடல் நசுங்கி தந்தை, மகள் பலி

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே பைக்கில் சென்ற தந்தை, மகள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் இருவரும் உயிரிழந்தனர். ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஷாத்நகர் நகர சந்திப்பில், சாலையில் சென்ற பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. பிடெக் மாணவி மைத்ரி என்ற இளம்பெண்ணை கல்லூரியில் விடுவதற்காக அவரது தந்தை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags :