வேலை வாங்கி தருவதாக 42 லட்சம் மோசடி 5 பேர் மீது வழக்கு பதிவு

by Editor / 09-02-2024 05:17:32pm
 வேலை வாங்கி தருவதாக 42 லட்சம் மோசடி 5 பேர் மீது வழக்கு பதிவு

சிவகாசியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 42 லட்சம் மோசடி. 5 பேர் மீது வழக்கு பதிவு விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விளாம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது கம்ப்யூட்டர் சென்டரில், கிச்சநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயசூர்யா, சரவணன், முத்துப்பாண்டி ஆகியோர் மத்திய ரிசர்வ் போலீஸ் வேலைக்காக விண்ணப்பித்து உள்ளனர். அப்போது தனக்கு மத்திய ரிசர்வ் படையில் தெரிந்த டிஎஸ்பி மூலம் வேலை வாங்கி தர ஏற்பாடு செய்வதாகவும் கூறி 3 பேரிடமும் 10 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி உள்ளார். கார்த்திக்குடன், குருசாமி, இமானுவேல், மோகன்தாஸ், கணேசன் ஆகியோர் சேர்ந்து பணத்தை வாங்கியுள்ளனர். மேலும் அழகுமுத்து பாண்டியராஜன், சிவராமன், கதிரேசன், ராஜ்குமார், மதன்ராஜ், மாரிமுத்து, ஈஸ்வரன், நாகராஜன், கண்ணபிரான் என மொத்தம்13 பேரிடம் ரூ. 42 லட்சத்து 60 ஆயிரம் வாங்கியபணத்துக்காக அனைவருக்கும் போலியான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் தயாரித்து வழங்கியுள்ளார். ஆர்டரகளை பெற்றுக் கொண்ட நபர்கள் சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் படை பயிற்சி மையத்தில் கொடுத்துள்ளனர். அப்போது அது போலியான ஆர்டர் என தெரிந்தது. அதனை தொடர்ந்து ஜெயசூர்யா உள்ளிட்ட 13 பேரும் முதல் அமைச்சரின் தனிபிரிவில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் மாரனேரி போலீசார் மோசடியில் ஈடுபட்ட குருசாமி கார்த்திக், இமானுவேல், மோகன்தாஸ், கணேசன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via