தகாத உறவுக்கு இடையூறு - மனைவியை கொன்ற கணவன்
பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (33). இவரது மனைவி பிரவீனா (24). ராஜ்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் மனைவியை கூலிப்படை ஏவி கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ளார் ராஜ்குமார். போலீசாரின் விசாரணையில் ராஜ்குமார் உண்மையை சொன்ன நிலையில், அவரை கைது செய்தனர்.
Tags :



















