தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.பெண்களுக்கான நடமாடும் மருத்துவ சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார்..
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று இந்தியாவில் முதல்முறையாக பெண்களுக்கான புற்றுநோய் நீரழிவு உயர் ரத்த அழுத்தம், இரத்த சோகை இதய நோய்கள் பரிசோதனை செய்ய மகளிர் நல்வாழ்வு துறையினால்மகளிர் நல்வாழ்விற்காக 40 கோடி ரூபாய் செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் அனுமதிக்கப்பட்டு, டிஜிட்டல் மேம்மோகிராபி, ECG கருவி, செமி-ஆட்டோஅனலைசர் (Semi-autoanalyser) உட்பட பல வசதிகளுடன் 1.10 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நடமாடும் மருத்துவ ஊர்தியை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு நடமாடும் மருத்துவ சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார்..
இத்திட்டம் காஞ்சியில் முதல் முறையாக தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனாளர்கள் தரும் தகவலை அடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஜனவரி மாதம் விரிவுபடுத்தப்படும் என்றும் ஆய்வக மூலம் மார்பக புற்றுநோய் கர்ப்பழிப்பை வாய் புற்றுநோய் முதலியவற்றை தொடக்க நிலையில் கண்டறிந்து பெண்களினுடைய நலத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக செயல்படுத்தி உள்ளது தமிழ்நாடு அரசு.
Tags :



















