இந்திய பண்பாட்டை காட்டும் கண்ணாடிகள் ஆக மாநில மொழிகள் விளங்குகின்றன

by Staff / 20-05-2022 01:01:07pm
 இந்திய பண்பாட்டை காட்டும் கண்ணாடிகள் ஆக மாநில மொழிகள் விளங்குகின்றன

 மொழியின் அடிப்படையில் சர்ச்சையை உருவாக்கிய சிலர் முயல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ள பிரதமர் மோடி இந்திய பண்பாட்டை காட்டும் கண்ணாடிகளாக  மாநில மொழிகள் விளங்குவதாகும் அவற்றை போற்றுதலுக்கு உரியதாக பாஜக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கட்சி தலைவர் ஜேபி நட்டா மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இலக்குகளை அழிப்பதற்கான நேரமிது என தெரிவித்தார் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான அரசின் பொறுப்பும் அதிகாரமும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். பாஜக அரசின் 8 ஆண்டுகள் ஆட்சி நாட்டுக்காகவும் ஏழை நடுத்தர மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர். பெண்களுக்கு அதிகாரமளித்தல் பாதுகாப்பு சமூகநீதி ஆகியவற்றை உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். சங்க காலத்திலிருந்தே நாட்டைக் கட்டமைக்கும் கொள்கைகளை தொண்டர்கள் கடைப்பிடிப்பதாக அதிகாரத்தை அடையும் முன்னே நாட்டுப்பற்றுடன் விளங்கியதாகவும் தெரிவித்தார்.சில கட்சிகள் நாட்டின் சிக்கல்களில் கவனம் செலுத்துவதில் இருந்து மக்களை திசை திருப்ப வதாகவும் அதில் சிக்காமல் கவனத்துடன் இருக்கவேண்டும் என்று தெரிவித்தார். அண்மைக்காலத்தில் மொழியின் பெயரில் சர்ச்சையை உருவாக்க சில முயற்சிகள் நடைபெறுவதாக குறிப்பிட்ட ஒவ்வொரு மாநில மொழியையும் போற்றுதலுக்கு உரியதாக கருதுவதுடன் அவற்றில் நாட்டின் பண்பாட்டை காப்பதாகவும் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையில் ஒவ்வொரு மாநில முதன்மை அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

 

Tags :

Share via