சாலை விபத்து.. 2 1/2 வயது குழந்தை உடல் நசுங்கி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பைக் மீது கல்லூரி பேருந்து மோதிய விபத்தில், தந்தை கண் முன்னே இரண்டரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. உளுந்தூர்பேட்டை அருகே தனவேந்தன் என்ற குழந்தை, தந்தையுடன் பைக்கில் சென்றுள்ளது. அப்போது, எதிரே வந்த கல்லூரிப் பேருந்து மோதியதில், பைக் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில், பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தை, கீழே விழுந்த நிலையில், பேருந்து ஏறி உடல் நசுங்கி உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :