மீனவர்கள் மீதான தாக்குதலை ஏன் தடுக்கவில்லை.........உதயநிதி கேள்வி

by Staff / 01-04-2024 02:58:32pm
மீனவர்கள் மீதான தாக்குதலை ஏன் தடுக்கவில்லை.........உதயநிதி கேள்வி

கச்சத்தீவு விவகாரத்தில் மோடியின் விமர்சனத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். பிரச்சாரத்தின்போது அவர் பேசுகையில், மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via