நெல்லை மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் இடமாற்றம்

by Editor / 02-07-2021 03:51:12pm
நெல்லை மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் இடமாற்றம்


திருநெல்வேலி மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் வே.விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சேரன்மகாதேவி வட்டாட்சியர் பி. வெற்றிச்செல்வி - அம்பாசமுத்திரம் நதிநீர் இணைப்பு திட்ட தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் இருந்த டி.மோகனா பாளையங்கோட்டை நதிநீர் இணைப்பு திட்ட தனிவட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
ராதாபுரம் துணை வட்டாட்சியர் ஜி.இசக்கிபாண்டி - நாங்குநேரி வட்டாட்சியராகவும், நாங்குநேரி வட்டாட்சியராக இருந்த கே.நல்லையா - நாங்குநேரி நதிநீர் இணைப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டனர்.
சென்னை- கன்னியாகுமரி தொழிற்தடத் திட்ட தனி வட்டாட்சியர் பி.எம்.முஹம்மது புஹாரி - சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலக நேர்முக உதவியாளராகவும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக தலைமை உதவியாளர் பி.பாலசுப்பிரமணியன் - சேரன்மகாதேவி வட்டாட்சிய ராகவும் மாற்றப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக தனி வட்டாட்சியர் எஸ்.சங்கர் - ஆட்சியர் அலுவலக தனிவட்டாட்சியராக (அகதிகள் மறுவாழ்வு) மாற்றப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via