தமிழக சபாநாயகராக அப்பாவு,?

by Editor / 07-05-2021 04:34:38pm
தமிழக சபாநாயகராக அப்பாவு,?


 

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக மு.க.ஸ்டாலின் மற்றும் 33 அமைச்சர்களுடன்கூடிய 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவை  பதவி ஏற்றுள்ளது
இந்த நிலையில், திமுகவில் அடுத்தக்கட்ட பதவிகளை பிடிக்க எம்எல்ஏக்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழக சபாநாயகர் பதவி, துணை சபாநாயகர் பதவி மற்றும் சட்டமன்ற திமுக கொறடா போன்ற பதவிகள் யாருக்கு கிடைக்கும் என்று பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஆனால், தமிழக சபாநாயகராக மூத்த சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு-வை நியமிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகவும், துணை சபாநாயகர் பதவி முன்னாள் அமைச்சர் பிச்சாண்டிக்கும், கொரோனா பதவி, பனை மரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via