தமிழக அரசு இன்னும் ஒரு வாரத்திற்குள் நியாய விலை கடை மூலமாக நிவாரணத் தொகை 6,000 ரூபாயை வழங்கும்.

இன்று மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மற்றும்இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மௌலிவாக்கம் கோவிந்தராஜ் நகரில் பாதிப்புக்குள்ளான 600 பொது மக்களுக்கு அரிசி பை- மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்வின், பொழுது தமிழக அரசு இன்னும் ஒரு வாரத்திற்குள் நியாய விலை கடைகளின் மூலமாக நிவாரணத் தொகையான 6000 ரூபாயை வழங்கும் என்றும் இன்னும் சில இடங்களில் மழை தண்ணீர் தேங்கி நிற்பதால் அவற்றை சரி பண்ணும் பணி தொடர்வதாகவும் தெரிவித்தார்..

Tags :