மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி புதிய மாணவர்கள் படிக்க மாற்று இடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைப் பொறுத்தவரை 150 மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என ஒன்றிய அரசு ஆலோசனை தெரிவித்திருந்தது. அந்த 150 மாணவர்கள் சேர்க்கை முடிந்த பிறகு அவர்களுக்கான வகுப்புகள் தொடங்க நான்கு இடங்களையும் ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. அவை மதுரையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரிகள், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை ஆகிய இடங்கள் ஆகும்.
இந்த நான்கு இடங்களும் மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஏற்புடையதாக இல்லை. ஒன்றிய அரசின் இந்த ஆலோசனைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றுக் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை எப்போது சந்திப்பது என்பது குறித்து தேதி தெரிந்ததும் அவரிடம் இதுகுறித்து பேச உள்ளோம். இன்னும் நான்கு ஐந்து நாட்களில் நானும் தமிழக அரசின் சுகாதாரத்துறைச் செயலாளரும் ஒன்றிய அமைச்சரை சந்திக்க உள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Tags :