போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது.

by Staff / 05-05-2023 04:16:41pm
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது.

திருவட்டார் அருகே ஈஞ்சக்கோடு பகுதியை சேர்ந்தவர் முருகன் ( வயது 49 ). இவர் மீது மார்த்தாண்டம் மகளிர் போலீசார் போக்கோ வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட முருகனை நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். முருகனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து முருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மார்த்தாண்டம் மகளிர் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் முருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதையடுத்து முருகனை நாகர்கோவில் ஜெயிலில் இருந்து பாளையங்கோட்டை ஜெயிலுக்கு கொண்டு சென்றனர். இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo