முதல்வர் சித்தராமையா பரபரப்பு கருத்து
எனது சடலம் கூட பாஜகவை நோக்கி செல்லாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். தனது அரசியல் வாழ்க்கை மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் கூறினார். கடந்த காலங்களில் சித்தராமையா பாஜகவில் சேர முயன்றதாக ஜேடிஎஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி கூறிய கருத்துக்கு சித்தராமையா பதிலளித்தார். சமீபத்தில் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்ததாகவும், அவர் பாஜகவில் சேர முயற்சிப்பதாகவும் கூறியிருந்த நிலையில், இவ்வாறு சித்தராமையா கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன், ஜேடிஎஸ் கூட்டணி அமைத்துள்ளது.
Tags :