2023-24ஆம் ஆண்டில் புதிதாக 10,000 மகளிர் சுய உதவிக் குழு-முதல்வர் தகவல்.

by Editor / 16-08-2023 06:04:14pm
 2023-24ஆம் ஆண்டில் புதிதாக 10,000 மகளிர் சுய உதவிக் குழு-முதல்வர் தகவல்.

தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் நன்மை தரும் திட்டங்களை தாமதமின்றி செயல்படுத்த அதிகாரிகள் முழுமனதுடன் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசின் மூத்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ள திஷா குழுவின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், 2023-24ஆம் ஆண்டில் புதிதாக 10,000 மகளிர் சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு சுழல்நிதியாக வழங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பண்ணை வாழ்வாதார நடவடிக்கை பணிகளுக்காக ரூ.60 கோடியும், பண்ணை சாராத பணிகளுக்கான ரூ.18 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

 

Tags : 2023-24ஆம் ஆண்டில் புதிதாக 10,000 மகளிர் சுய உதவிக் குழு

Share via