கடையநல்லூர் குழந்தைகளுக்கு சென்னையில் நேர்ந்த சோகம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் குமந்தபுரம் நகராட்சி 1வது வார்டு வடகாசி அம்மன் கோவில் தெருவில் குடியிருக்கும் உடையார் சென்னை மணலி பகுதி மாத்தூர் ஏரியாவில் 79வது தெருவில் வாடகை வீட்டில் தங்கி சென்னை மணலி பகுதியில் தனியார் புட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் சந்தியா வயது 9 பிரியரக்ஷிதா வயது 7 ஆகியோரை அழைத்துக் குடும்பத்துடன் குடியேறினார் திடீரென எதிர்பாராத விபத்தில் உடையாருக்கு விபத்து ஒன்றில் காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் மகனைப் பார்ப்பதற்காக தந்தை பேச்சு படையாட்சி தாயார் சந்தான லட்சுமி ஆகியோர் கடையநல்லூரில் இருந்து சென்னை சென்றனர் சம்பவம் நடந்த அன்று மருத்துவமனையில் மகனுக்கு துணையாக தந்தை பேச்சி படையாட்சியும் மருமகளும் மருத்துவமனையில் தங்கி உள்ளனர்
வீட்டில் உடையாரின் இரண்டு குழந்தைகளும் மேலும் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஆம்பூர் அக்ரஹாரத் தெருவை சேர்ந்த உடையாரின் மைத்துனன் பூதத்தான் என்ற கண்ணனின் குழந்தை பவித்ரா (வயது 7) ஆகிய மூன்று குழந்தைகளும் உடையாரின் தாய் சந்தான லட்சுமி ஆகியோரும் வீட்டின் கதவை முழுமையாக அடைத்து விட்டு இரவில் ஆழ்ந்து தூங்கி உள்ளனர் அப்பொழுது எதிர்பாராத விதமாக வீட்டில் மாட்டி இருந்த குட் நைட் கொசு விரட்டி மின்சார கோளாறினால் திடீரென வெடித்து தீப்பிடித்து உள்ளது மேலும் வீட்டில் உள்ள மின்விசிறி போன்றவைகளும் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது அப்பொழுது ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத் தினரல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மூன்று பெண் குழந்தைகள் உடையாரின் தாய் சந்தான லட்சுமி உட்பட 4 பேரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர் இதுகுறித்து சென்னை மாதவரம் பால் பண்ணை போலீஸா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நான்கு .பேரின் உடல்களையும் கைப்பற்றி ஸ்டாலின் மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு கடையநல்லூர் குமந்தபுரம் சுடுகாட்டில் நான்கு நபர்களின் உடல்களை தகனம் செய்ய தயார் நிலையில் உள்ளனர் ஒரே குடும்பத்தில் நான்கு பேர்கள் உயிரிழந்த சம்பவம் கடையநல்லூர் குமந்தபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Tags :