ஊருக்குள் உலா வந்த முதலை-
கடலூர் அருகே வெள்ளக்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மழைநீர் குட்டையில் முதலை ஓன்று படுத்து இருந்துள்ளது.இதனை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் பரவியது. இதனால் ஏராளமான மக்கள் திரண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் பலத்த மழைபெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. வீடுகளை சூழ்ந்து மழைநீர் நிற்பதால் தங்களது பகுதிக்கும் முதலை வந்திருக்கும் என அதிர்ச்சியில் உள்ளனர்.
கடலூர் வன அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர்
மழைநீரில் படுத்திருந்த முதலையை வன ஆர்வலர் ஒருவர் பிடிக்க முயன்றார். அப்போது அந்த முதலை வாலால் தாக்கியதில் வன ஆர்வலர் லேசான காயமடைந்தார்.
உடனே அந்த முதலை தப்பி செல்ல முயன்றபோது. உஷாரான வனத்துறையினர் வலைபோட்டு முதலையை பிடித்தனர். பின்னர் அந்த முதலையை காட்டுமன்னார்கோவில் அருகே நீர்பிடிப்பு பகுதிகளில் வசிக்கும் முதலைகள் நிறைந்திருக்கும் இடத்தில் விடப்பட்டது. இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.
Tags :